அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது ஏ ஐ டி யு சி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியு சி மாவட்ட பொதுச் செயலாளர் டி. தண்டபாணி தலைமை தாங்கினார் ஏ ஐ டி யு சி மாநில பொதுச் செயலாளர் தில்லைவனம் சிறப்புரையாற்றினார்
மாவட்ட துணை செயலாளர் தனசிங் அரியலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் து பாண்டியன் ஆறுமுகம் மருதமுத்து முருகேஸ்வரி கோவிந்தசாமி சிவக்குமார் நல்லுசாமி நாகூரார் மாரியப்பன் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
தொழிலாளர் நலன் காப்பதில் தமிழ்நாடு அரசால் பின்னுக்கு தள்ளப்படும் போக்கினை கைவிட்டு தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்திட கிக் பிளாட்பார்ம் தொழிலாளர் நலனை பாதுகாக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்றிட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் தமிழக முழுவதும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது