பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் திமுக மாவட்ட அவைத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் பாபு துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பண்ணந்துர்,
தட்ர அள்ளி, தாமோதரஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு மகளிர் அரசு மேல்நிலை பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை திமுக மாவட்ட அவை தலைவர் நாகராஜன், ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் பாபு, ஒன்றிய அவை தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ், மகேஸ்வரிசங்கர். வெண்ணிலா முருகேசன், எருமம்பட்டி மணி, மாவட்ட பிரதிநிதி சந்துரு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் 43 துறைகள் சார்ந்த அனைத்து துறைகளின் கோரிக்கை மனுக்கள் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
உடனடியாக தீர்வு காணப்பட்டு மனு அளித்த ஒரே நாளில் நம் முகாமில் பட்டா ரேஷன் கார்டு உள்ளிட்ட உடனடியாக தீர்வு காணப்பட்டது அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு இந்த சிறப்பு முகாமில் பயன் பெற்றனர்.
இந்த முகாமில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளான வீட்டுமனை பட்டாக்கள், ஆதார் கார்டு ரேஷன் கார்டு பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், மகளிர் உரிமைத் தொகை மற்றும் சுகாதாரத் துறையின் மூலமாக முகாமிற்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவர்கள் மூலமாக சோதனை செய்து முகாமிற்கு வந்த அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.