தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்விழா
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 101-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக நடைபெறும் என்கிற முதல்வர் அறிவிப்பின் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பின்னர் அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்