தஞ்சாவூர் மாவட்டம் :, திருவையாறு ஒளவை மழலையர் தொடக்கப்பள்ளியில் இளையோர் பாராளுமன்ற அமைச்சர்கள் பதவி ஏற்புவிழா நடந்தது.
விழாவில் பள்ளி தாளாளர் கண்ணகி கலைவேந்தன் அமைச்சர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார் .
பிரதமமந்திரியாகசைந்தவி, துணை பிரதமராக ஸ்ரீ ஹரி, அமைச்சர்களாக ஹன்சா, கீர்த்தினி கல்வி அமைச்சர்களாக அருள்மொழிவர்மன், ஸ்ரீசாய்ஹரி, போக்குவரத்து துறை திருமுருகன், நிதிஷ் ,விளையாட்டு துறை ஜெய்பிரியன் லோகித்சாய், சுகாதாரத்துறை ஜனனிஸ்ரீ ,சுவேத்திகா ஆகியோர் பொறுப்பேற்றனர்.
ஒளவைகோட்ட நிறுவனர் கலைவேந்தன் அமைச்சர்களுக்கான பொறுப்புகள் மற்றும் அமைப்பின் நோக்கம் குறித்து அறிவுறுத்தினார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர் .
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் கோகிலா, பொறுப்பாசிரியர் மஞ்சுளா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்