செங்குன்றம் செய்தியாளர்
தமிழக முதல்வர் அறிவித்துள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்த மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார் அதன்படி மாதவரம் மண்டல 3 ன் சார்பில் அலுவலர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு சென்று அங்கு மக்களை சந்தித்து 13 துறைகள் மற்றும் 43 சேவைகள் துண்டு பிரசுரங்களை வழங்கி அதில் அடங்கியுள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து,
விபரங்கள் கூறி வரும் 15 ஆம் தேதி மாதவரத்தில் உள்ள எம் .ஆர் .பேலஸ் திருமண மஹாலில் முகாம் அமைத்து பொதுமக்கள் தங்களின் மனுக்களை பூர்த்தி செய்து அன்றைய நாளில் கொண்டு வருமாறு அறிவுறுத்தினர்.
இதில் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 வார்டு 25 ன் உதவி பொறியாளர் ஆர் .சரவணன் மூர்த்தி ,சுகாதார அலுவலர் சங்கர் ,சுகாதார ஆய்வாளர் கங்காதரன் மற்றும் ஊழியர்கள் உடனே இருந்தனர் .