தேனி கம்பத்தில் ஏ ஆர் ஏ எஸ் ,கியா கார் கம்பெனி ரோட்டரி கிளப் கம்பம் கிரீன் வேல்யூ இணைந்து நடத்தும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…
ஜூலை ,09 தேனி மாவட்டம் கம்பத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான மாபெரும் மகளிர் வாகனப் பேரணியை ஏ ஆர் ஏ எஸ் , கியா கார் கம்பெனி ரோட்டரி கிளப் கம்பம் கிரீன் வேல்யூ இணைந்து நடத்தும் பாதுகாப்பான சாலை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு விழாவினை முன்னெடுக்கும் விதமாக முற்றிலும் பெண்களைகொண்டு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் ஆட்டோவை இயக்கி பொதுமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த பேரணி கூடலூர் சாலையில் ஆரம்பித்து அரசு மருத்துவமனை சிக்னல் புதிய பேருந்து நிலையம் வழியாக டிப்போவில் வந்தடைந்து கம்பம் ரிலையன்ஸ் பல்க் அருகே நிறைவு பெற்றது.
கம்பம் ஹான்ஸ் ஆப் ரோட்டரி கிளப் கம்பம் கிரீன்வேலி சார்பாக
முன்னதாக நோட்டரி கிளப் சாந்தா நாராயணன் குமார் தலைமையிலும் ரோட்டரி கிளப் தலைவர் நாராயணகுமார் ஏற்பாட்டில் துணை ஆளுநர் சதீஷ் பாபு முன்னிலையில் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராமன் தொடங்கி வைத்து இந்த மாபெரும் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது
கூடலூர் காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கல்லூரி பள்ளி தாளாளர்கள் என துறை சார்ந்த பெண்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது கம்பம் மட்டுமல்லது சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் வரவேற்பை பெற்றது.