திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை ஸ்ரீ சீதளாதேவி (எ)மகா மாரியம்மன் பிறந்த இடமான புங்கஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குழந்தை மகா மாரியம்மன் ஆலயத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கூறை கொட்டகையில் இருந்த இந்த ஆலயத்திற்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று,

அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது கும்பாபிஷேகம் தற்போது நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 6- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி முதல் காலம் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. மறுநாள் 7- ந்தேதி திங்கட்கிழமை காலை 7- மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி இரண்டாம் காலம் பூஜை, தீபாராதனை நடைபெற்று,
காலை 9- மணிக்கு கடங்கள் புறப்பட்டு காலை 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10- மணிக்கு ஸ்ரீ மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்று 10.15- மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளை திருப்பந்துறை ஸ்ரீ சுந்தர கணபதி வேத சிவாகம பாடசாலை திப்பிராஜபுரம் எஸ். சிவகணேச குருக்கள், வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலய இரா. செல்வம் பூசாரியார், கைலாசநாதர் ஆலய அர்ச்சகர் டி. ஜெகன்நாத குருக்கள், ஆலய அர்ச்சகர் பி.அருள் பூசாரியார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் வலங்கை தொழிலதிபர் டாக்டர் ஆர்.செல்வம், ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலய அறங்காவலர் ஆர்.சிவராமகிருஷ்ணன், வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் க. குமரன், ஸ்ரீ வைத்தீவரர் நற்பணி மன்ற செயலாளர் ஆர்.ஜி. பாலா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன், தொழில்நுட்ப கல்வித்துறை முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம. வேல்முருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் லதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி, புங்கஞ்சேரி கிராம நாட்டாண்மைகள், கிராமவாசிகள், மாதர் சங்கத்தினர் மற்றும் வெண்புறா இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.