தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் போடிநாயக்கனூர் தாலுகாவுக்குட்பட்ட மேலப்பரவு மலை கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த 65 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் ஓடைப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரத்தினம், குழந்தைகள் நல மருத்துவர் சந்திரிகா, மருந்தாளுநர் ரமேஷ், மற்றும் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார், ஆகியோர் பங்கேற்று கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கியும் வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வாக அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் போடிநாயக்கனூர் தாலுக்கா காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர், காவலர்கள் கலந்து கொண்டனர் இந்த முகாமில் கண்டறியப்பட்ட நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் வனப்பகுதிக்குள் நெகிழிப்பை பயன்படுத்துவதை தடை செய்தல் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அறிவுறுத்தலின்படி மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மஞ்சப்பை வழங்கப்பட்டது
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் பெரியசாமி மருந்து மாத்திரைகள் வழங்கினார்