துறையூர் ஜீலை-09
திருச்சி மாவட்டம் துறையூரில் 100 சதவீதம் பேருந்துகள் அந்தந்த வழிதடங்களில் இயக்கப்படுவதாக கிளை மேலாளர் ஜெயசந்திரன் தெரிவித்தார்.17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., தொமுச உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால்பேருந்துகள் ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இருப்பினும் துறையூரில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஜெயசந்திரன் தெரிவித்தார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்