தேனி வனச்சரகத்தில் வன உயிரின வார விழாவினை யொட்டி மரக்கன்றுகள் நடவு செய்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி வனச்சரகம் வால்கரடு காப்புக்காடு பகுதியில் புதன்கிழமை வனத்துறை சார்பில் வன உயிரின வார விழாவினை wildlife week celebration 2025 முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மாவட்ட வன அலுவலர் அருண்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நெகிழியை தவிர்ப்போம் வன வாழ்வை காப்போம் என்ற தலைப்பிலான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் ஏற்றுக் கொண்டனர் இதன் பின்னர் வால்கரடு காப்புக்காடு பகுதியில் நெகிழி குப்பைகளை அகற்றி வனத்தை தூய்மையாக்கும் பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்

முன்னதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட கலெக்டர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சள் பைகளை வழங்கி அதன் முக்கியத்துவம் மற்றும் வனவிலங்குகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலர் சிசில் கில்பர்ட் வனச்சரக அலுவலர் சிவராம் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பசுமை தோழர் அய்ஷானா கௌரவ வன விலங்கு காப்பாளர் ராஜ்குமார் மற்றும் வனப் பணியாளர்கள் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *