பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், வனஉயிரின வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று (08.10.2025) பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வனவிலங்கு வார விழாவானது அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. வனங்களில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும். இதுகுறித்து மாணவ,மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இந்த ஆண்டு வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி 04.10.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற முன்னிலையில் வழங்கினார்.
தொடர்ந்து விளைநிலத்தில் வனவிலங்குகளால் ஏற்பட்டு பாதிப்புகளுக்கு பயிர் இழப்பீடு தொகையாக வேப்பந்தட்டை வனச்சரகத்திற்குட்பட்ட நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள த.கோபி என்பவருக்கு ரூ.2,500ம், கள்ளப்பட்டி, பூலாம்பாடி கிராமத்தில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு ரூ.4,500ம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் .த.இளங்கோவன், அட்மா தலைவர் .வீ.ஜெகதீசன், திருச்சி சர்வதேச விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் .டி.ஆர்.சிவசங்கர், வனச்சரக அலுவலர்கள் .பா.பழனிகுமரன் .க.சுதாகர், .க.முருகானந்தன் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.