எல்.எண்டத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள எல்.எண்டத்தூர் ஊராட்சி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கினர்.
எல் எண்டத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண்களுக்கான கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் பொத்தனூர் நாமக்கல் சிவகாமவல்லி செயலாளர் வேர்டு நிறுவனம் ராதா சீனிவாசன் ஆலோசகர் வேர்டு நிறுவனம் ஆகியோர் இணைந்து
எல்.எண்டத்தூர் சோழன் ஏற்பாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15 டியூப்
லைட் 10 ஃபேன் செயல்படக்கூடிய 12 வேல்ட் திறன் கொண்ட இன்வெர்ட்டர் வழங்கினர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் யமுனா குப்புசாமி வட்டார மருத்துவர் சுரேஷ்
மருத்துவர் பென்டட்சி சுகாதார ஆய்வாளர் சந்தோஷ் எல் எண்டத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வார்டு உறுப்பினர் ரா.பரமசிவன் உள்ளிட்ட மருத்துவமனை செவிலியர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.