மஞ்சள் வண்ண ஆடை அணிந்து வந்த மழலை குழந்தைகளுக்கு மஞ்சள் வண்ண பூக்கள்,பலூன்களுடன் உற்சாக வரவேற்பு

பள்ளி குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றலை ஒரு புதுமையான வழியில் ஒருங்கிணைக்கும் விதமாக பள்ளிகளில் மஞ்சள் வண்ண தினம் கொண்டாடப்படுகிறது..

இந்த நிலையில், கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் பள்ளியில் மஞ்சள் வண்ண விழா கொண்டாடப்பட்டது..

பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஹெரால்டு ஷாம் ஒருங்கிணைப்பில்,மஞ்சள் நிறத்தைப் பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துதல் மற்றும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விழா நடைபெற்றது..

முன்னதாக பள்ளி வளாகத்தில் மஞ்சள் வண்ண பலூன் தோரணம் கட்டப்பட்டு மழலை குழந்தைகளின் வகுப்பறைகள்,மஞ்சள் வண்ணங்களில் ஆன பொம்மைகள்,பூக்கள்,போன்ற ஓவியங்கள் தீட்டப்பட்டு மஞ்சள் வண்ணமயமாக காட்சி அளித்தன..

மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து வந்த பள்ளி குழந்தைகள் வகுப்பறையை வலம் வந்தனர் குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக,மஞ்சள் நிறங்களில் உள்ள பொருட்களைத் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்து, அதைப் பற்றிய செய்திகளை கூறினர்.

குறிப்பாக மஞ்சள் நிறத்தை கொண்ட பழங்கள்,காய்கறிகள்,மற்றும் உணவு பொருட்கள் வகுப்பறைகளில் காட்சி படுத்தப்பட்டன…

மஞ்சள் நிறத்தின் முக்கியத்துவத்தையும், அது தரும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *