துறையூர்
திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சி காளிப்பட்டியில் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரண்யா மோகன்தாஸ் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சிங்களாந்தபுரம் ஊராட்சி காளிப்பட்டியில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பழைய உறுப்பினர்களை புதுப்பித்து,புதிய உறுப்பினர்களை சேர்த்து ஒவ்வொரு வீட்டிலும் ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி தீவிரமாக திமுகவில் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
இதில் சிங்களாந்தபுரம் கிளை செயலாளர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஜமான், புண்ணியவான் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்