தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கருப்பூர் கிராமத்தில் கும்பகோணம் மண்டலம் தஞ்சாவூர் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டம் நிறைவு விழா நிகழ்ச்சி, விநாயகர் கோவில் அருகில் வளாகத்தில் நடந்தது.
கடந்த, ஐந்து மாதமாக தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட்டு, அமைதி கிராமமாக அறிவித்து, நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
உலக சமுதாய சேவா சங்கம் தலைவர் மயிலானந்தன், ,இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினார் தஞ்சை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை ,துணைத் தலைவர் பரணிதரன், அழியாறு, அறிவுத்திருக்கோயில் மக்கள் தொடர்பு அலுவலர் வேத குமரச்செல்வன்,, கருப்பூர் (மலை) சிவகுமார்,கருப்பூர் காந்தி நல்வாழ்வு சங்கம் நிறுவனர் மாவடியான், , ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
“தொடர்ந்து அனுபவமுறை பட காட்சிகள், யோகாசனம் , கரகாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக செயலாளர் சிவராமன் வரவேற்றார். நிறைவில்தஞ்சை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, நிர்வாக அறங்காவலர் பூர்ண சந்திரன் நன்றி கூறினார்.