அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

முறையாக விசாரனை செய்யாமல் கோவை மாவட்ட செயலாளரை அடித்து துன்புறுத்திய இரத்தினபுரி காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கோவை இரத்தனபுரியை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோவை மாவட்ட செயலாளராக உள்ள இவர்,மூன்று மாதங்களுக்கு முன்னால் தன்னை முறையாக விசாரனை செய்யாமல் இரத்தினபுரி காவல் நிலைய அதிகாரிகள் தம்மை அடித்து துன்புறுத்தியதாகவும்,இது குறித்து பலமுறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இது வரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்..

இந்நிலையில் கோவை மாநகர காவல் துறை ஆணையர்அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் தலைமையில் புகார் மனு அளிக்க சௌந்தரபாண்டியன் மற்றும் கட்சியினர் வந்திருந்தனர்..

மனுவில்,இரத்தினபுரி அருகே தனது நண்பருக்கு ஏற்பட்ட தொழில் பிரச்னை காரணமாக ராஜ் என்பவரிடம் தகராறு ஏற்பட்டதாகவும்,ஆனால் இது தொடர்பான விவகாரத்தில் இரத்தினபுரி காவல் நிலையத்தில் தாம் விசாரனைக்காக சென்ற போது காவல் துறையினர் தம்மை அடித்து துன்புறுத்தியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்..

கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் உரிய நடவடிக்கை இல்லை என மனுவில் கூறியுள்ள சௌந்தரபாண்டியன் இது தொடர்பாக தம் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *