மன்னச்சநல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் சம்பவம் நடந்த நேற்று பூனம்பாளையத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணி நிமித்தமாக சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்