போடி நகராட்சியில் சுகாதார பணிகளை ஆய்வு செய்து நகர மன்ற தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் என்று வாரந் தோறும் ஒவ்வொரு வார்டு வாரியாக சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்படி பணிகளை நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொறியாளர் குணசேகரன் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர்கள் சக்திவேல் கபீர் ஆகியோர் 29 ஆவது வார்டு பகுதிகளில் வாழும் அந்த பகுதி மக்கள் குறைகளை வீடு வீடாக கேட்டறிந்து அதன்படி பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதன்படி அந்த பகுதி மக்களிடம் சாக்கடை கால்வாய் தூர்வாருதல் கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாருதல் குப்பைகளை அகற்றுதல் கொசுப்புழு ஒழிப்பு பணி உள்ளிட்ட சுகாதார பணிகள் நடைபெறுவது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்ட நகராட்சி தலைவர் மக்கள் குறைகளை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் திமுக பொதுக்குழு உறுப்பினர் எம் சங்கர் உள்பட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.