அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் நவீன் குமார் 20 இவர் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரம் உள்ள நீரேற்றம் நிலையம் அருகே கடந்த மே மாதம் 29ஆம் தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார்
அப்போது அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்றனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனை ஈடுபட்ட நவீன் குமாரை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் நவீன் குமார் தொடர் குற்றம் புரிபவர் என்றும் இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் க்கு பரிந்துரை செய்தார்
இதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமிக்கு மேல் பரிந்துரை செய்தார் இதனை ஏற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நவீன் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
இதனை தொடர்ந்து நவீன் குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட தற்கான உத்தரவு பிரதி திருச்சி சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது