ஜப்பான் தொழில்நுட்பத்தில் மண்ணை உழவு செய்யவும், மண்ணை சமன்படுத்தவும் ஒரே இயந்திரம் என்பதால் விவசாயிகள் வாங்க ஆர்வம் !!
தமிழகத்தில் பிரபலமான ஜே எஸ் அக்ரோ நிறுவனம் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு இயந்திரங்களை வடிவமைத்து வழங்கி வருகிறது.
குறிப்பாக பிரபலமான நிலத்தை துளையிடும் இயந்திரம், உழவு இயந்திரம், தள்ளுவண்டியுடன் கூடிய பரப்பி, வைக்கோல் கட்டும் இயந்திரம் உள்ளிட்ட எண்ணற்ற இயந்திரங்களை தயாரித்து விற்பனை வருகின்றனர்..
இந்த நிலையில் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மண்ணை தோண்டவும், சமன்படுத்தும் வகையிலும் ஒரே இயந்திரத்தை ஜே.எஸ். அக்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் தொழில்நுட்பத்தில் மண்ணை தோண்டுவதற்கு ஜே.சி வடிவிலான ப்ளேடுகளுடன் கலப்பை மற்றும் மண்ணை சமன்படுத்துவதற்கான ஹைட்ராலிக் தொழில்நுட்பத்துடன் கூடிய டெலெவலர் ஆகிய இரண்டையும் சேர்ந்து ஒரே இயந்திரமாக உருவாக்கப்பட்டது.
இந்த இயந்திரத்தில் உள்ள ப்ளேடுகள் எளிதாக அடி மண்ணை தோண்டி உழவு செய்ய முடியும் எனவும் ப்ளேடுகளை எளிதாக மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.எஸ். நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
உழவர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த உழவு இயந்திரம் கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் விவசாய பொருட்கள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ஜப்பான் நிறுவனமான TAIYO நிறுவனத்தின் வணிகத்தலைவர் நிசியாமா சேன் அறிமுகம் செய்து வைத்து முதல் விற்பனையை தொடர்ந்து தொடங்கி வைத்தார்.
இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்ட சிலநிமிடங்களில் தமிழ்நாடு, கேராளா, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடாகா , புதுச்சேரி உள்ளிட்ட மாநிங்களை சேர்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட உழவர்கள் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.