கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்
அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்றவருக்கு அரியலூரில் பாராட்டு விழா அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் மனப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் சிவமூர்த்தி இவருக்கு தமிழக அரசின் சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது சமீபத்தில் திருச்சியில் நடந்த விழாவில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை ஆசிரியர் சிவமூர்த்தி அவர்களுக்கு வழங்கினார்கள்
இதை பாராட்டி அரியலூர் ரெட் கிராஸ் அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது அரியலூர் மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் ஜெயராமன் செயலாளர் சண்முகம் பொருளாளர் எழில் துணைத் தலைவர் எஸ் எம் சந்திரசேகர் நியமன துணைத் தலைவர் செல்வராஜ் முன்னாள் தலைவர் அரியலூர் நல்லப்பன் நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவசங்கர் சத்தியமூர்த்தி காமராஜ் சத்தியமூர்த்தி அசோக்குமார் சின்னதுரை சிவசக்தி ஆகியோர் சிவ மூர்த்தி அவர்களுக்கு சால்வை பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்