தேனியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு பயனாளிகளுக்கு நலத்த உதவிகள் வழங்கல்

தேனி மாவட்ட ஆட்சியர் புதிய கூட்ட அரங்கில் வியாழக்கிழமை தமிழ்நாடு சட்டமன்ற பஸ் பேரவை அரசு உறுதிமொழி குழுத் தலைவர் தி. வேல்முருகன் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர். முனைவர் கே. சீனிவாசன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கநல்லூர் ச. அரவிந்த் ரமேஷ் சேலம் மேற்கு இரா. அருள் விருதுநகர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் ஓமலூர் ரா.மணி காரைக்குடி சா. மாங்குடி அண்ணா நகர் எம் கே மோகன் பெருந்துறை எஸ். ஜெயக்குமார் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்

மேலும் தேனி மாவட்டத்தின் அமைந்துள்ள தமிழகத்திலேயே சிறந்த சனீஸ்வர பகவான் திருக்கோவிலான குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் புனரமைப்பு பணிகள் தொடர்பாகவும் விரைவில் கும்பாபிஷேகம் பணிகள் உள்பட பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்

நாளை வெள்ளிக்கிழமை சின்னமனூர் அருகே உள்ள மலைப்பிரதேசங்களான மேகமலை ஹைவேவிஸ் இரவங்கலார் மேல்மணலார் ஆகிய மலைப் பிரதேசங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன இந்த பகுதிகளில் சாலை பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இது குறித்து குழுவின் தலைவர் தி. வேல்முருகன் கூறும்போது மாவட்டத்தில் நீண்ட நெடிய நாட்களாக நிலுவையில் உள்ள நிறைவேற்றுவதற்காக இந்த குழு ஆய்வு செய்து வருகிறது எனவே துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சரியான விளக்கத்தினை அழிக்க வேண்டும் அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்வதை அரசு அலுவலர்களின் பங்கு இன்றியமையாததாகும் அப்பணிகளை அரசு துறை அலுவலர்கள் சிறப்பாக மக்கள் சேவைகள் செய்ய வேண்டும் என்று உறுதிமொழி குழுத் தலைவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *