திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் போட்டியைத் துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயவேல் முன்னிலை வகித்தார்.
ஒன்றியத்தில் இருந்து சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய அளவிலான உடற்கல்வி இயக்குனர் ராம்பிகா, உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, ரமேஷ் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினார்கள். நிகழ்வின் முடிவில் உடற்கல்வி ஆசிரியர் வேதநாயகம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.