தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர். ஜுலை- 11. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இராமசாமி திருமண மண்டபத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க தஞ்சாவூர் கிளையின் 12வது பேரவைக்கூட்டம்.
தஞ்சாவூர் கிளை தலைவர் இரா.இராசகோ பாலன் தலைமையில் பேரவை நடைபெற்ற கூட்டத்திற்கு துணை செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்புரையாற்றினார். தலைவர் பி.சந்திரசேகரன், துணைத் தலைவர் பி.ராமசந்திரன், ஆலோசகர்கள் வெங்கட்ராமன், ஏ.பி.இராசசேகரன் எஸ்.எழிலன், கே.தர்மலிங்கம் ஜி.விஸ்வநாதன், எஸ்.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிதிநிலை அறிக்கையை பொருளாளர்கள் வி.சுப்ரமணியன், வி.ராம்குமார் ஆகியோர் வாசித்தனர். காலத்தில் 75-வயது பூர்த்தியடைந்த எம்.புகழேந்தி, எ.குழந்தை ஆர்.ஜானகிராமன், எம்.திருமறைச்செல்வன், ஏ.ஆர்.இராகவன் ஆகிய ஓய்வூதியர்கள் சங்கம் செய்த சிறப்பை ஏற்று வாழ்த்துரையாற்றினர். ஓய்வு பணியினை மேற்கொள்ளவுள்ள வட்ட அலுவலர்கள் ஆர்.கிரிதரகோபால், வி.லோகநாதன், கண்மணி ஆகியோர் சங்கம் வழங்கிய நினைவு பரிசினை ஏற்று வாழ்த்துரை வழங்கினர். மாநில துணத்தலைவர் திருச்சி எ.நடராஜன் சிறப்புரையாற்றினார்.
தமிழக அரசு அவ்வப்போது வழங்கி வரும் அகவிலைப்படி உயர்வினை வாரிய ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அதே தேதியில் வழங்காமல் காலம் கடந்து வழங்கி வருவதால் கடந்த காலங்களில் ஆண்டு கணக்கில்
அகவிலைப்படி உயர்வு வழங்காமல் நிலுவையில் உள்ளது.
அதனை மேலும் தாமதம் செய்யாமல் உடன் வழங்கவும், கூட்டத்தில் கடந்த 1- 1- 2025 அன்று அரசு அறிவித்து வழங்கிய 2% அகவிலைப்படி உயர்வினை வாரிய ஓய்வூதியர்களுக்கு வழங்கியதற்கு பேரவை நன்றி தெரிவித்தும், அத்தேதியில் உடன் வழங்காமல் பின் தேதியிட்டு அதாவது 8.7.2025 முதல் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதை இப்பேரவை வருத்தம் தெரிவிப்பதுடன் அதனை மாற்றி 1.1.2025 தேதியிலிருந்து வழங்க கோரியும், பீ.பி.91-ன்படி அரசின் முடிவுகள் வாரியத்தை கட்டுப்படுத்தாது என்ற உத்தரவினை திரும்ப பெறவும், 2025 ஆம் ஆண்டிற்கான கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவை உடன் அறிவிக்க கோரியும், வாரியத்தில் இந்த ஆண்டு இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களை பணி நியமனம் செய்து உத்தரவு அளித்தமைக்கு அரசிற்கும் வாரியத்திற்கும் நன்றி தெரிவித்தும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
சங்க துணை செயலாளர் கோ.தனபால் கிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்து நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார். ஓய்வூதியர் நலநிதி செயலாளர் ஜெ.சுரேஷ் நன்றி கூறினார்