தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மேலவீதி பங்காரு காமாட்சி மண்டபத்தில் ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குருமுனி 50-சிஷ்யர்களும் உலக அமைதிக்காக ஸ்ரீவராகி அம்பாளுக்கு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அய்யாவாடியில் உள்ள பிரித்திங்கரா தேவி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக பூஜைகள் செய்து உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்தியாவில் வாழும் கோபால் பிள்ளை சுப்ரமனியம் மூலமாக ஜப்பானில் வசித்து வந்த செல்வந்தரான சிவா ஆதீனம் பாலகும்ப குருமுனி சிவனின் பெருமைகளையும், சிறப்புகளையும் அறிந்து தன் சொத்துக்களை துறந்து சிவபக்தனாகி ஆதினமானார். இவர் தென்னாட்டு உடைய சிவனே போற்றி என்ற சித்தர்களின் வாக்கை மனதில் நிறுத்தி இந்தியாவின் தென்னாடான தமிழ்நாட்டில் உள்ள பழனி, திருச்செந்தூர், திருச்சி, இராமேஸ்வரம் ,ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் ஜப்பானியர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நிகழ்வுகளை தஞ்சாவூர் மற்றும் அய்யாவாடி ஆகிய இடங்களில் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக பூஜைகளை சிவபக்தர் கரந்தை குகன் ஏற்பாட் செய்திருந்தார்.