கோவை
கோவை கோவில்பாளையம் சர்க்கார் சாமகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா மற்றும் நவீன ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கலந்துகொண்டு புதிய அரங்கத்தைத் திறந்து வைத்து பூமி பூஜையிலும் பங்கேற்றார்.விழாவிற்கு சி.ஆர்.எஸ் நினைவு அறக்கட்டளை குழு தலைவர் பாலசுந்தரம் வரவேற்றார். சி ஆர் சுவாமிநாதன் பற்றிய உரையை ஏ.வி. குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் வரதராஜன் வாசித்தார்.
சி ஆர் எஸ் மெமோரியல் திட்டத்தின் திட்ட அறிக்கையை ராக் அமைப்பின் நிறுவனரும் சிஆர்ஐ பம்ப்ஸ் தலைவருமான சௌந்தரராஜன் வாசித்தார். ராக் அமைப்பு பற்றிய உரையை ராக் அமைப்பின் தலைவர் துளசிதரன் வாசித்தார்.
பள்ளி அறிக்கையை பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் கெத்சி வேதப் பிரியா வாசித்தார்.இந்நிகழ்வில் கோவை தலைமைக் கல்வி அதிகாரி பாலமுரளி சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தின் தலைவர் சௌந்தரராஜன் சி.ஆர்.எஸ் நினைவு அறக்கட்டளை குழு தலைவர் ஆர்.ஆர். பாலசுந்தரம் கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் துளசிதரன்,எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் சுரேஷ்,யூனியன் தலைவர் எஸ்.எஸ். குளம் துணைத் தலைவர் விஜயகுமார் எஸ்.எஸ். குளம் பள்ளி தலைமையாசிரியர் விமலா, சிஆர்எஸ் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
2023–2024 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு “சிஆர்ஐ பம்ப்ஸ் டாப்பர்ஸ் விருதுகள்” வழங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு சிறப்பான மற்றும் தரமான கல்வியை பெற முடியும் என சிஆர்எஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
விழா முடிவில் சர்க்கார் சாமகுளம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விமலா நன்றி உரை கூறினார்.