எம் எல் ஏ திறந்து வைத்த ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அவதி
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் 2வது வார்டில் தெப்பக்குளம் அருகில் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரூ 9.90 லட்சம் மதிப்பீட்டில் எம்எல்ஏ ஸ்டாலின் குமாரால் திறந்து வைக்கப்பட்ட புதிய ரேஷன் கடை ஒரு மாதத்திற்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது ரேஷன் கடையை மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்..
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்