செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூர் கொம்யூன் அரியூர் தாமரை நகர் அருள்மிகு தாமரை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பாரதி நகர் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்திலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது

புதுவை வில்லியனூர் கொம்யூன் அரியூர் தாமரை நகரில் அருள்மிகு தாமரை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அளவில் மஹா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது
இதில் வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் கலந்துகொண்டு பூரண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டார் ஆச்சாரியர்கள் மந்திரங்கள் சொல்லப்பட்ட புனித நீரை கோவில் உச்சியில் உள்ள விமானத்தின் மேல் புனித நீரை மந்திரங்கள் முழங்க புனித நீரை ஆச்சாரியர்கள் ஊற்றினார்கள் இதில் அரியூர் ஊர் தலைவர்கள் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து. அரியூர் பாரதி நகரில் உள்ள ஶ்ரீ பாலமுருகன் ஆலயத்தில். 11.30 மணி அளவில் யாகசாலையில் இருந்து மந்திரங்கள் முழங்கே புனித நீரின் கலசத்தை ஆச்சாரியார்கள் கொண்டு வந்து கோபுரத்தின் உச்சியின் உள்ள விமானத்தின் மேல் மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றினார்கள்
இதில் ஊர் தலைவர்கள் கோவில் நிர்வாகிகள் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது காவல்துறையினர் விழா முழுவதும் கண்காணித்து வந்தனர்