சிறப்பு விருந்தினர்களாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்,மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோர் பங்கேற்பு

கோயமுத்தூர் சமையல் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா கோவை கணபதி பகுதியில் உள்ள கிருஷ்ண கவுண்டர் மண்டப அரங்கில் நடைபெற்றது..

சங்கத்தின் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில், ,நிறுவன தலைவர் மகேந்திரன், செயலாளர் முருகேசன்,துணை தலைவர் செந்தில் குமார்,பொருளாளர் சங்கரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டார் கவுரவ விருந்தினர்களாக கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி,அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது..

முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கோவையில் சமையல் உபகரணங்கள் தயாரிப்பு தொழில் மேலும் மேம்படுவதற்கு சமையல் உபகரணங்கள் உற்பத்திகென நூறு ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என,கோயமுத்தூர் சமையல் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் மகேந்திரன்,மற்றும் தலைவர் தங்கவேலு ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்….

மேலும்,சமையல் உபகரணங்கள் உற்பத்தி தொடர்பான மூலப்பொருட்கள் மற்றும் அவற்றின் தரம், உற்பத்தி செயல்முறை, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம்,,ஏற்றுமதியில் கோவை குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்து வருவதாக குறிப்பிட்ட அவர்,தொழிற்பூங்கா அமைத்து கொடுத்தால் இந்திய அளவில் சமையல் உபகரணங்கள் உற்பத்தி துறையில் கோவை முக்கிய இடத்தை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *