கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூர் மாவட்டம் எடப்பாடி பழனிச்சாமி வருகை நகரமே விழாக்கோலம் தமிழக முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு விழாக்களில் கலந்து கொள்கிறார்
வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அரியலூர் மாவட்ட எல்லையில் அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அரசு தலமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது இதில் அதிமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கிளை அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பளிக்கிறார்கள்
மறுனால் (செவ்வாய்க்கிழமை) அரியலூர் அண்ணா சிலை அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றுகிறார் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்ற முழக்கத்தோடு இந்த கூட்டம் நடைபெறுகிறது
எடப்பாடியார் அரியலூர் வருகையை ஒட்டி அரியலூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது எங்கு பார்த்தாலும் அதிமுக கொடி தோரணங்களும் வண்ண வண்ண விளக்குகளும் வண்ண வண்ண வரவேற்பு பேனர்களும் கட்டப்பட்டு நகரமே விழா கோலம் கண்டுள்ளது