மது பாட்டில், போதை மாத்திரை,புகையிலை வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வுஒரே நேரத்தில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது
மாணவர்களின் சாதனை கழுகு பார்வையில்
போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து தமிழக அரசுடன் இணைந்து காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு விழப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,திம்மாவரம் பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் இணைந்து போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கவனம் ஈர்த்துள்ளனர்..
அதன் படி திம்மாவரம் பகுதியில் உள்ள புனித பால்ஸ் பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்,புகையிலை, போதை மாத்திரை மற்றும் நோ ட்ரக்ஸ் போன்ற வடிவில் மாணவர்கள் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒரே நேரத்தில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இணைந்து நடத்திய இந்நிகழ்வு ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..
முன்னதாக இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய பிரபல கவிஞரும்,எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் போதை பொருட்களை தடுப்பதில் தமிழக காவல் துறையினர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்..
தொடர்ந்து போதை பொருட்கள் தீமைகள் குறித்து விழிப்புணர்வில் உலக சாதனை செய்த மாணவ,மாணவிகளுக்கு ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் கார்த்திக் குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி ஆகியோர் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்…