துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம்-புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் சித்திரப்பட்டி சௌந்தர்யா ஏசி ஹாலில் நேற்று முன்தினம் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.
துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்கத்தின் 2025-26
ஆம் ஆண்டிற்கான புதிய சங்கத் தலைவராக ஜி.சேதுபதி,செயலாளராக எஸ்.விவேகானந்தன்,பொருளாளராக டாக்டர் ஆர் விஜயகுமார் ஆகியோர் பணியேற்று கொண்டனர்.
மேலும் துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்க 2024 – 25 சங்க நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன்,உறுப்பினர் வளர்ச்சி இயக்குநர், திருமூர்த்தி,ரோட்டரி அறக்கட்டளை இயக்குநர் மாதவன்,பப்ளிக் இமேஜ் இயக்குநர் மோகன்,சங்க பயிற்றுநர் ஞானசேகரன், ரோட்டரி கனவு அட்டை சரவணன்,சிறப்பு திட்ட இயக்குநர் ரமேஷ்,பன்னாட்டு சேவை இயக்குநர் செந்தாமரை கண்ணன்,சங்க ஆலோசகர் ஸ்ரீனிவாசன்,நிர்வாக செயலாளர், மணிகண்ட ஆனந்த்,அவை பாதுகாவலர் லோகநாதன், குடும்ப கூட்டம் கனகராஜன், குடும்ப சுற்றுலா இளங்கோவன் , உறுப்பினர் சுற்றுலா சிவா மற்றும் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினர்கள் ,நண்பர்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்