செங்குன்றம் செய்தியாளர்
புழல் அடுத்த சண்முகபுரம் பஸ் நிறுத்தம் அருகில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கிங் மேக்கர் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் செவாலியர் டாக்டர் என். ஆர் தனபாலன் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கேக் வெட்டி
அனைவருக்கும் வழங்கினர். மேலும் காமராஜரின் பிறந்தநாளில் ராமச்சந்திர ஆதித்தனாரின் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது .
இதில் செல்ல பாண்டியன் வீ.டி . பத்மநாபன் ,ரவிக்குமார் ,ராஜேஷ்குமார் உட்பட கிங் மேக்கர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் செய்தி தொடர்பாளர் எம் பி ரமேஷ் உட்பட சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர் .இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கப்பட்டது.