எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே செம்பதனிருப்பு ஊராட்சியில் கலைஞரின் வெங்கள திருவுருவ சிலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சி மற்றும் அரசு விழாவில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்த முதல்வர் முக ஸ்டாலின்சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சி குமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து திமுக கொடியை ஏற்றி வைத்தார்
இந்நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்கள் மெய்ய நாதன் கே.என்.நேரு எம்ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை செல்லும் முதல்வர் மயிலாடுதுறை பூம்புகார் சாலை முதல் கச்சேரி சாலை வரை சாலையில் நடந்து (ரோட்ஷோ) சென்று மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அண்ணா பகுத்தறிவு மன்ற கட்டிடடத்தை திறந்து வைத்து கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மயிலாடுதுறை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.