சின்னமனூரில் கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கு.காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா பள்ளி வளாகத்தில் பள்ளி செயலாளர் கே.மாரிமுத்து தலைமையில் பள்ளி குழு தலைவர் எல்.கே.சிவமணி பள்ளி செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது பள்ளி குழு தலைவர் எல்.கே.சிவமணி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கே.மாரிமுத்து உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் நாகராஜன் அவர்கள் பள்ளி மாணவர்கள் பயன் பெரும் வகையில் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பாடபுத்தகங்கள் வழங்கினார் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கொடியரசன் சின்னமனூர் ரோட்டரி சங்கம் சார்பில் சுமார் வகுப்பு நடத்த ரூபாய் 150000 ஒன்றரை லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்குவதாக உறுதியளித்தார் பேச்சு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்க பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி இருபால் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.