செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு புதிரை வண்ணான் சமூகத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுச்சேரி ஆட்சிப் பரப்பில் வில்லியனூர் மன்னாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் உழவர்கரை நகராட்சி உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சேரி வாழ் வண்ணம் ( எ) புதிரை வண்ணான் சமூகத்தை சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் சலவைத் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்
பட்டியலின. SC சலவை தொழிலாளர்கள் சமூகத்தை சார்ந்த எங்களுக்கு சிறப்புக் கூறு SCP நிதியில் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள அரசு சொந்தமான இடத்தை தேர்வு செய்து சலவை கூடம் சலவைத் துறை கட்டுவதற்காக பலமுறை விண்ணப்பங்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களிடம் கோரிக்கை மனுவை கொடுக்கப்பட்டது
இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று புதிரை வண்ணான் சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் இயக்கத்தின் தலைவர் கூத்தான் (. எ ) தெய்வநீதி பொதுச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் காவல் துறையின் கண்காணிப்பில் போராட்டம் நடைபெற்றது