காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் அருகே தீப்பற்றி எரிந்த காற்றாலை 5 தென்னை மரங்கள் தீயில் கருகின
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நிழலி கிராமத்திற்கு உட்பட்ட சாம்பக்காட்டு தோட்டம் பகுதியில் தனியார் காற்றாலை ஒன்று இரவு 7 மணி அளவில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள மளவென பிடித்து எரிந்தது. இதனால் காற்றாலையின் இறக்கை ஒன்று உடைந்து கீழே விழுந்தது. அருகில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.
இருப்பினும் காற்றாலையின் அருகே இருந்த தென்னந்தோப்பு ஒன்றில் தீ பரவியது.அதில் தோப்புக்குள் இருந்த 5 தென்னை எரிந்து கருகின. அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்
ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கும், காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பற்றி எரிந்த காற்றாலையின் மதிப்பு ரூ. 2 கோடி மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.