தாராபுரம் நகர் காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி, கோட்ட அமைப்பாளர் குமரவேல், பூஜாரி பேரவை நகர அமைப்பாளர் வெங்கடேஷ்,வி.எச்.பி நகர அமைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விநாயகர் சதுர்த்தி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.