தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை சிவன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த கோயிலில் சிவனை ஈ வடிவில் போகர் வழிப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திருச்சி மற்றும் கரூர் , நாமக்கல் உட்பட பல மாவட்டத்தை சார்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த மஹா கும்பாபிஷேக விழாவை அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.
இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து அன்னம் பெற்று சென்றனர்.இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் வாழும் கலியுக சித்தர் தவத்திரு.சுவாமி இராமானந்தா மற்றும் சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் , திருஈங்கோய்மலை ஶ்ரீ லலிதா மகிளா சமாஜத்தின் தலைவி யோகிநி ஜெயாம்பா ஸரஸ்வதி, செயலாளர் யோகி
சிவப்ரியாம்பா ஸரஸ்வதி , பெங்களூர் தொழிலதிபர் ராஜசேகர் ஜி , கிராமியம்.நாராயணன் , வாழைக்காய் வியாபாரி சேட் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனை படி இந்த மாபெம் அன்னதான விழா ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன்,தியானேஷ் , வெங்கடேஷ், திருமலைராஜன், தமிழ்செல்வன்,கருணாநீதி, சுந்தரேசன்,அர்ச்சகர் மஹா விஷ்ணு ,சந்தோஷ், மதியழகன், சக்தி,ரவி,கோபி,சரவணன்,பாலு வாத்தியார்,திருமுருகன், முத்து,சரவணன் ஜி, மணி,முகிலன்,செந்தில், தமிழ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.