அரியலூரில் நடந்தது தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத்தலைவர் ராகவன் பேசினார் மாவட்ட செயலாளர் செல்வி அரியலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் வேல்முருகன் செயலாளர் ஷேக் தாவூத் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் மூர்த்தி ராஜவேம்பு சத்துணவு ஊழியர் சங்கம் காந்தி உட்பட பலர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள் மாவட்ட பொருளாளர் பேப்டிஸ்டா அனைவருக்கும் நன்றி கூறினார் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் அனைத்து தொகுப்பு புதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி எம்ஆர்பி தொகுப்பு புதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பனியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப என் எம் சி மற்றும் ஐபிஎச்எஸ் பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது