தூத்துக்குடியில் திமுக முன்னோடிகள் இல்லம் சென்று கௌரவித்த அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு ஓருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் ெபாற்கிளி மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் வழங்கி பேசுகையில் உங்களது பேரன் உங்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக கலைஞாின் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் வந்துள்ளேன் என்று பேசியது மட்டுமின்றி கழகத்தின் ஆனிவேராக இருந்த மூத்த முன்னோடிகளை சட்டமன்ற தொகுதியில் உள்ளவா்களை சந்தித்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாா்.
தங்கள் வாழ் நாளில் தன் நலம் கருதாமல் கழகமே குடும்பம் என கழகத்தின் இக்கட்டான காலங்களிலும் போராடங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்று கழகமே உயிர் என வாழ்ந்த கழகத்தின் மூத்த முன்னோடிகள் பலரை பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் இல்லம் சென்று தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முன்னோடிகள் இல்லத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சென்று நலம் விசாாித்து ஊக்கத்தொகை வழங்கினாா். 2026ல் நடைபெறவுள்ள தோ்தலில் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த உங்கள் குடும்பத்தினா் துணையாக இருக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.
மூத்த உறுப்பினர் ஓருவா் கூறுகையில் திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75ம்ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் கட்சி ஆரம்பித்த காலக்கட்டத்தில் பயணித்த பலருக்கும் தலைமை கழகம் உத்தரவிற்கிணங்க எல்லா பகுதியில் உள்ளவா்களை ேதர்வு செய்து கௌரவிக்கும் விதமாக பொற்கிளிகள் ஏற்கனவே தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். இருப்பினும் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றியின் இலக்கை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.
அதற்கேற்றாற் போல் தமிழகம் முழுவதும் அனைவரும் பணியாற்றி வருகின்றனர். இன்றைய தலைமுறையினருக்கு கடந்த காலங்களில் கழகத்திற்காக வாழ்ந்த முன்னோடிகள் பற்றிய முகவுரைகள் தொிய வேண்டும். அதை எந்த முறையில் கெளரவிக்க வேண்டும். என்பதற்காக நோில் வந்து கௌரவித்தனா்.
அப்போது உங்களது தந்தை பொியசாமி கடந்த காலத்தில் பணியாற்றிய பல வரலாறுகளையும் எடுத்துக்கூறி கழகம் என்றால் எப்படி பணியாற்ற வேண்டும் பொது வாழ்க்கை என்றால் பொதுமக்களோடு நட்பை எந்த முறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களையும் அமைச்சாிடம் பாிமாறிக்கொண்டனர்.
இந்தநாளை என் வாழ்நாளில் ஓரு பொன்னாளாக கருதுகிறேன். என்று கூறினார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளர்கள் செல்வம், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடன் சென்றனா்.