திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி தலைமையாசிரியை பிரேமா தலைமையில் நடைபெற்றது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் பா. சிவநேசன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் குலாம் மைதீன், நெடுஞ்செழியன், செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜரை பற்றிய உரை, கவிதை, பாடல் போன்ற நிகழ்வுகளை மாணவிகள் நிகழ்த்தி காட்டினரர்.
பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி பிரதீபா, இரண்டாம் இடம் பெற்ற மாணவி ஜனனி, மூன்றாம் இடம் பெற்ற மாணவி தேவதர்ஷினி, 12- ஆம் வகுப்பில் முதல் இடம் பெற்ற மாணவி கலைச்செல்வி, இரண்டாம் இடம் பெற்ற மாணவி வைஷ்ணவி, மூன்றாம் இடம் பெற்ற மாணவி காவியா ஆகியோருக்கு மாணவிகளுக்கு ஒய்வு பெற்ற ஆசிரியர் புரவலர் சம்பந்தம் அன்பளிப்பாக கேடயம் மற்றும் பணப்பரிசுகளை வழங்கினார்.
மேலும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, பேச்சு, பாட்டு ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.