எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
கொள்ளிடம் அருகே தனிநபரால் ஆக்கிரமைக்கப்பட்ட திருபுவனவீரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சேர்ந்த திருபுவன வீரமங்கலம் கிராமம் உள்ளது. அங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளிக்கு அப்பகுதியைச் சேர்ந்த முகமது அலிப் என்பவர் அவருக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை கடந்த 1981 ஆம் ஆண்டு தானம் செய்து செட்டில்மெண்ட் செய்து கொடுத்தார்.
இதேபோல் கடந்த 1996 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் அவருக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை இப்பள்ளி விளையாட்டு திடலுக்காக தான சென்டிமென்ட் செய்து கொடுத்தார்.
இந்நிலையில் மொத்தமாக உள்ள இந்த 25 சென்ட் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை அப்பகுதியைச சேர்ந்த தனிநபர் ஒருவர் முறைகேடாக கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து, பத்திர பதிவு செய்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து திருபுவனவீரமங்கலம் கிராம மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்ட ஆண்,பெண்கள் திருபுவனஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு முன்புறம் அமர்ந்து பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீண்டும் பள்ளிக்கு மீட்டு தர வலியுறுத்தி கோஷம் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போலி பட்டா வழங்கிய வட்டாடட்சியர் அலுவலகம்,போலி பத்திரபதிவு செய்த கொள்ளிடம் பதிவாளர் அலுவலகம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.