சென்னை மாநகராட்சி மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து.
சுகாதார நிலையம் மற்றும் கால்வாய் பணிகளை மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம் எல் ஏ நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராச்சாமி எம்பி மற்றும் துரை சந்திரசேகர் எம்எல்ஏ மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் உள்ளிட்டோ பங்கேற்பு.
சென்னை மணலி மண்டலத்திற்குட்பட்ட 22 ஆவது வார்டு மணலி சின்னசேக்காடு பகுதியில் அமைந்துள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி மேயரின் மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.27 லட்சம் செலவில் கட்டப்பட்ட சத்துணவு கூடம் கட்டிடம், மணலி மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டு 80 அடி சாலையில் மகளிர் உடற்பயிற்சி கூடத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் மணலி புதுநகர் 35 வது தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார கட்டிட பணிகளை ஆய்வு செய்து புதிய கட்டிட பணிகளுக்காக பூமி பூஜைகள் போடப்பட்டது.
மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாதவரம் பகுதி செயலாளர் புழல் நாராயணன்.மாமன்ற உறுப்பினர்கள்
நந்தினி சண்முகம். காசிநாதன். கீர்த்தி. மண்டல ஆணையர் தேவேந்திரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.