நாட்டுக்கு பதக்கம் வெள்ள தமிழ்நாடு அரசு ஐஸ் விளையாட்டு உள்ளரங்கம் அமைத்துதர கோரிக்கை
ரஷ்யா நாடு மாஸ்கோவில் 19 வயதுக்கு கீழ் உள்ள ஆடவர்களுக்கான (பேண்டி) எனும் ஐஸ் ஆக்கி சர்வதேச தரவரிசைகளுக்கான போட்டிகள் நடைபெற்றது, இதில் இந்திய அணி சார்பில் கலந்துக்கொண்ட வீரகளில் தமிழகத்தை சேர்ந்த விஜய், பவன், மனோரஞ்சித்,சஞ்சை ஆகிய நான்கு பேர் பங்கேற்றனர்,
இறுதியாக நான்காம் இடம் பிடித்த நிலையில் தமிழக வீரர்கள் சென்னை திரும்பினார்கள் அவர்களுக்கு உறவினர்கள், ஐஸ் ஆக்கி விளையாட்டு ஆர்வலர்கள் பூ கொத்துகள் கொடுத்தும், சால்வை அணிவித்து வரவேற்றனர்,
அப்போது செய்தியாளகளிடம் பேசிய தமிழ வீரர்களுக்கான பயிற்சியாளர் பிரசன்குமார் மற்றும் விளையாட்டு வீரர் சஞ்சை ஆகியோர் பேசும்போது:-
உலக அளவில் தரவரிசைகான சர்வதேச போட்டி ரஷ்யா நாட்டில் மாஸ்கோ நகரத்தில் நடைபெற்றது, 19 வயதிற்கு கீழ் உள்ளோர்களுக்கான போட்டியில் இந்திய அணியில் நான்குபேர் விளையாடினார்கள், அங்குள்ள குளிரான தட்ப வெப்ப நிலையில் அதிகமான ஐஸ் ஆக்கி அரங்குகளில் பயிற்சி பெற்ற சர்வதேச அணிகளுடம் மோதி நான்காம் இடம் பிடித்தோம், நாட்டுகாக பதக்கம் வெள்ள எங்களுக்கு மேலும் பயிற்சி பெற நாட்டில் டெல்லி, டோரடூனில் ஆகிய இரண்டு இடத்தில் மட்டும் பயிற்சி அரங்கு உள்ளது அதுபோல் தமிழகத்திலும் அரசு அமைத்துகொடுத்தால் நாட்டுகாக பதக்கம் வெள்வோம் என்றனர்.