தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்.
ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் மற்றும் தஞ்சாவூர் ரோல் பால் அசோசியேசன் இணைந்து நடத்தும் 12வது மாநில அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. சென்னை, திருச்சி திண்டுக்கல், கண்ணியாகுமரி உள்பட 25 மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர்.
ரோல் பால் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதில் சிறப்பாக விளையாடிய
ஆண்கள் அணியில் 12 பேரும், பெண்கள் அணியில் 12 பேரும் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யபடுவார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு என்பது குறிப்பிடதக்கது.
தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சுப்ரமணியம், செயலாளர் கோவிந்தராஜ், துணை தலைவர்கள் சரவணன், பிரேம்நாத், பொருளாளர் ராஜசேகர், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராமநாதன், தஞ்சாவூர் மாவட்ட ரோல் பால் சங்க செயலாளர் மணிகண்டன் ஆகியோ போட்டியினை ஒருங்கிணைத்திருந்தனர்.