காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர்,
திண்டுக்கல் மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிர காஷ் (வயது 30). தொழில் அதிபர். அவருடைய மனைவி சிவ சங்கரி (28). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பிரகாஷ், சொந்த ஊரான மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு சென்றார்.
அங்கு தனது நண்பர்கள் விசு, வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து சொந்தமாக ஸ்டிக்கர் மற்றும் லைட்டிங் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் பிரகாஷ் தனது நண்பர்களிடம் இருந்தும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்தும் சுமார் ரூ.39 லட்சம் வரை கடனாக வாங்கி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார்.ஆனால் முதலீடாக செலுத்திய பணம் திரும்ப கிடைக்காமல் நஷ்டமாகியுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவர் தவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பிரகாஷ் தலைமறைவாகி விட்டார்.இதற்கிடையே தனது கணவரை காணவில்லை என பிரகாஷ் மனைவி சிவசங்கரி தென்காசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசாரும், கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களும் தென்காசி மற்றும் திண்டுக்கல்லில் கடந்த 8 மாதங்களாக பிரகாசை தேடி வந்தனர்.இந்த நிலையில் தலைமறைவான பிரகாஷ், திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் குதிரைபள்ளம் ரோடு பொன்னிநகரில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசு (38), புளியரை தனியார் நிறுவனத்தை சேர்ந்த பரமசிவன் (40), கந்தமங்கலத்தை சேர்ந்த குமார் (45), மலையன்வீதியை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகியோர் நேற்று காலை பிரகாஷ் வசித்து வந்த வீட்டுக்கு 2 கார்களில் வந்துள்ளனர்.
தாங்கள் கொடுத்த பணத்தை பிரகாசிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள், பிரகாசை காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றுள்ளனர். தாராபுரம் நோக்கி கார் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.
இதுகுறித்து பிரகாஷின் மனைவி சிவசங்கரி காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காங்கயம் போலீசார், தாராபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இத னையடுத்து தாராபுரம் போலீசார், தாராபுரம்-உடுமலை சாலை யில் அந்த கார்களை மடக்கி பிடித்தனர். பின்னர் பிரகாஷை மீட்டனர். மேலும் அவரை கடத்திய 4 பேரையும் பிடித்தனர். 2 கார் களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.