எண்ணூர் முகத்துவார ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்த தாழங்குப்பம் நெட்டுக்குப்பம் காட்டுக்குப்பம் சிவன் படை வீதி உள்ளிட்ட ஏராளமான கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இறால் நண்டு மீன் போன்றவைகளை பிடித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த முகத்துவார ஆற்றில் எண்ணூர்,மணலி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த தனியார் மற்றும் அரசு நிறுவனத்தின் ஆயில் கழிவுகள் கலக்கிறது. இதனால் இந்த ஆற்றில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் செத்து, இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் சீரழிந்து வருகிறது
என மீனவர்கள் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வரும் நிலையில் இதை எடுக்க ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் முகத்துவார் ஆற்றில் கடந்த இரு தினங்களாக எண்ணெய் கழிவுகள் மிகுந்த வண்ணம் உள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க போக முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மீனவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.