திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்

64 சக்தி பீடங்களில் முதன்மையான திருவாரூர் ஸ்ரீகமலாம்பாள் ஆலய ஆடிப்பூர கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.

         சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தனி கோவிலாக அமைந்திருப்பது ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலயம்.  இவ்வாலயம் 64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது..   இவ்வாலயத்தின் வருடாந்திர உற்சவமாக ஆடிப்பூரத்தையொட்டி உற்சவ கொடியேற்றும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது. 

   கொடியேற்றத்தையொட்டி கொடிமரம் முன்பாக சிவாச்சாரியார்கள் யாகவேள்வி பூஜை நடத்தினர்.  பின்னர் கொடிமரத்தினை சுற்றி அமைந்துள்ள விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் முதலான வாசனை திரவிய நறுமனப்பொருட்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் உற்சவ கொடிக்கு வேதமந்திரங்கள் முழங்க புஷ்பாஞ்சலி பூஜை நடத்திட அதனை தொடர்ந்து கொடிமரத்தில் உற்சவ கொடி ஏற்றப்பட்டது.

   ஆடிப்பூர விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரைபோன்று வடிவமைக்கப்பட்ட திருத்தேரில் ஆழித்தேரோடும் 4 ராஜவீதிகளில்  ஸ்ரீகமலாம்பிகை அம்மன் பவனிவரும் தேரோட்டம் வரும் 27ம் தேதி மாலை நடைபெறுகிறது.

   மேலும் ஆடிப்பூர உற்சவத்தையொட்டி வரும் 23ம் தேதி பூதவாகனம், 24ம் தேதி வெள்ளி யானை வாகனம், 25ம் தேதி வெள்ளி ரிஷப வாகனம் என  பல்வேறு வாகனங்களில் தினசரி இரவு அம்பாள் பவனிவரும் வகையில் 10 நாட்கள் நடைபெறுகிறது.

   கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீகமலாம்பிகை அம்மனை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *