காரமடை எஸ் வி ஜி வி பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.
காரமடை ரோட்டரி சங்கத்தின் சார்பில் எஸ்விஜி வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா நடைபெற்றது.. ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் டாக்டர்.பழனிச்சாமி முதல்வர் சசிகலா செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் ரத்தினசாமி அறங்காவலர் தாரகேஸ்வரி மற்றும் குரு சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார் விழாவில் இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக பாயல்,சம்யுக்தா, லீடீஷா,மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
மாவட்ட இன்ட்ராக்ட் சேர்மன் எழில்வண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் விழாவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவசதீஷ்குமார், உதவி ஆளுநர் எஸ். எம்.விஜய் பிரபு,ரய்லா ஷேர் பர்சன் சுதன், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் காரமடை ரோட்டரி சங்க பொருளாளர் தீபக் குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.